பள்ளிக்கல்வித்துறையில் இருந்த 47 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்கள் என 47,000 பணியிடங்களுக்கு மேலாக தற்காலிக தொடர் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அவை அனைத்தும் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்பட்டுள்ளது.