கேரள மாநிலம் பாலக்காடு அருகே நடைபெற்ற நேர்ச்சை விழாவில் யானை மிரண்டு பாகனை மிதித்து கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குட்டநாடு பகுதியில் 47 யானைகள் பங்கேற்று மேள தாளம் முழங்க ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நேர்ச்சை விழாவில் நாராயணன்குட்டி என்ற யானை திடீரென மிரண்டது. அப்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்ற குஞ்ஞுமோன் என்ற யானைப்பாகனை தாக்கி மிதித்து கொன்றது. மேலும் மற்றொருவரை தாக்கிய நிலையில், அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டளார்.