உக்ரைன் மீது, ஒரே நாளில் 450 ட்ரோன்கள், 45 ஏவுகணைகளை வீசி ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின், டினிப்ரோ நகர் மீதான ட்ரோன் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு சிதைந்த நிலையில், 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா ஏவிய நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் வான், தரை, கடலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள், முக்கியமான உள்கட்டமைப்புகளை குறி வைத்ததாக, உக்ரைன் ராணுவம் தெரிவித்து உள்ளது.