உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 41 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கும்பமேளா நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 16 நாட்களே எஞ்சி உள்ளதால், மக்கள் இரவு பகல் பார்க்காமல் புனித நீராடி வழிபாடு செய்து வருகின்றனர்.