இஸ்ரேலின் 40 போர் விமானங்கள், ஈரான் எல்லைக்குள் புகுந்து 100-க்கும் மேற்பட்ட குண்டு மழை பொழிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பு, ஏவுகணை உற்பத்தி தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து அழித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, அராக் நகருக்கு அருகில் உள்ள ஈரானின் IR-40 கனரக நீர் உலையை இஸ்ரேல் தாக்கியுள்ளது.