கேரளா மாநிலம் ஷோரனூர் அருகே ரயில் மோதி தமிழ்நாட்டை சேர்ந்த ரயில்வே தூய்மை பணியாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆற்றின் மேல் செல்லும் ரயில் பாதையில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மீது பாலக்காட்டில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது.