கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிதாக 4 குளங்கள் வெட்டும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. ரேஸ் கிளப்பில் தற்போதுள்ள 3 குளங்களில் மொத்தம் 30 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீரை சேமித்து வைக்க முடியும் என்ற நிலையில், கிட்டத்தட்ட 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 புதிய குளங்களை உருவாக்குவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இரவு பகலாக இப்பணி வேகமாக நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ள மாநகராட்சி நிர்வாகம், இது தொடர்பான காணொளியையும் வெளியிட்டுள்ளது.