திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாள் விழாவில், முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாவது நாள் விழாவை முன்னிட்டு, முத்து பந்தல் வாகனத்தில், பகாசுர வத அலங்காரத்தில் தாயார்களுடன் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, நான்கு மாட வீதியில் வலம் வந்தார். அப்போது அங்கு குவிந்திருந்த மக்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.