வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. தெலுங்கானாவில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 20 ஓவரில் 297 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவருக்கு 164 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது.