அமேசானில் எலெக்ட்ரானிக் பொருட்களின் விற்பனையில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கடைகளை நோக்கி நகர வேண்டிய அவசியமே இல்லை வீடு தேடி நாம் விரும்பும் பொருட்கள் வரும் என்பதை அமேசான் போன்ற இ காமர்ஸ் நிறுவனங்கள் சாத்தியமாக்கின.அதில் தமிழ்நாடு குறித்து தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.அமேசான் நிறுவனத்தில் விற்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கான மிக பெரிய சந்தையாக தமிழ்நாடு உள்ளது என அந்நிறுவனத்தின் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் இயக்குநர் ரஞ்சித் பாபு தெரிவித்துள்ளார்.