சிம்பு நடிக்கும் ’அரசன்’ திரைப்படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு முதல் முறையாக நடிக்கும் திரைப்படம் அரசன். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிம்புக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.