ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தடுமாறும் இந்திய அணி மீண்டு வருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறது. 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 128 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆஸ்திரேலியாவை விட 29 ரன்கள் பின்தங்கியுள்ளது.