இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி திட்டமிட்டப்படி நடக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. வரும் 27ம் தேதி கான்பூரில் நடைபெறும் இந்த போட்டியை நடத்தவிடாமல் போராட்டம் நடத்தப்படும் என்று மிரட்டல் வந்ததையடுத்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, திட்டமிட்டப்படி டெஸ்ட் போட்டி நடக்கும் என்றும் போட்டிகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.