2K Love Story திரைப்படம் வரும் 14-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக இப்படம் அமைந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதாக கூறப்படுகிறது.