கேரளாவில் பட்டப்பகலில் காரை வழிமறித்து, சினிமா பாணியில் இரண்டரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நகை வியாபாரியான அருண் சண்ணி, அவரது நண்பர் ரோஜி தாமஸ் ஆகியோர், கோவையிலிருந்து கேரளாவுக்கு 2 கிலோ 600 கிராம் தங்க நகைகளை வியாபாரத்துக்காக காரில் எடுத்து சென்றனர்.திருச்சூர் மாவட்டம் குதிரான் அருகே 3 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், திடீரென வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி காருடன் கடத்திச் சென்றனர்.நகை வியாபாரியையும், அவரது நண்பரையும் வெவ்வேறு இடங்களில் இறக்கிவிட்டு விட்டு, 2 கிலோ 600 கிராம் தங்க நகைகளையும் காருடன் கொள்ளையடித்துச் சென்றனர்.சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.