குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் ரயில் மூலம் வரும் 1-ம் தேதி சென்னை வந்தடைவார்கள் என அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டை 26 நபர்கள் குஜராத் பாவ்நகருக்கு புனித யாத்திரை சென்று திரும்பும் போது, மலஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட தீடீர் வெள்ளத்தில் அவர்கள் சென்ற பேருந்து சிக்கியது.இதனால் முதல்வர் உத்தரவின் பேரில், குஜராத் மீட்பு குழுவினருடன் இணைந்து அயலகத் தமிழர் நலத்துறை அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அவர்கள் வரும் 1-ம் தேதி சென்னை வந்தடைவார்கள் எனவும், தெரிவித்துள்ளார்.