லெபனானின் மத்திய பெய்ரூட் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்ட நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.