21-ம் நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கானது என பிரதமர் மோடி கூறினார். லாவோஸில் நடைபெற்ற ஆசியான்- இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர், கிழக்கு நோக்கிய இந்தியாவின் கொள்கை காரணமாக இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையிலான உறவுக்கு புது ஆற்றல் கிடைத்துள்ளதாக கூறினார்.