நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக தாம் நியமிக்கப்பட்டால், அணியை வழிநடத்த தயாராக இருப்பதாக வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், தனக்கு தலைமை பண்பில் நம்பிக்கை இருப்பதாகவும், தலைவனாக அணியை வழிநடத்துவது மிகப்பெரிய பொறுப்பு என்றும் தெரிவித்தார். கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை என தெரிவித்த வெங்கடேஷ் ஐயர் அணியின் கேப்டனாகும் வாய்ப்பு தனக்கு கிடைத்தால் அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வதாகவும், அந்த பொறுப்பை நிராகரிக்க எந்த ஒரு காரணமும் இல்லை எனவும் தெரிவித்தார்.