இந்தியாவில் கடந்த ஆண்டில் வாகன விற்பனை 9.1% அளவுக்கு அதிகரித்தது. கடந்த ஆண்டு மட்டும் 2 கோடியே 61 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் இருசக்கர வாகனங்களின் விற்பனை 10.7 சதவீதமும், 3 சக்கர வாகனங்களின் விற்பனை 10.4 சதவீதமும், பயணிகள் வாகனம் 5.1 சதவீதமும், டிராக்டர் வாகனங்கள் 2.5 சதவீதமும் அதிகரித்துள்ளது. வணிக ரீதியிலான வாகனங்கள் 0.07 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.