தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2.69 லட்சம் தொழிலாளர்களுக்கு 376 கோடி ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணை பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வசதி வாரியம் மற்றும் குடிநீர் நீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.