பூங்காவில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவனிடம் மர்ம நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையை அடுத்த சித்தாலபாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனியை சேர்ந்த முதியவர் பிரான்சிஸ். இவர் அதே பகுதியில் உள்ள பூங்காவிற்கு அவரது மனைவி மற்றும் பேரன் டேரியல் மைக்கேல் உடன் சென்றுள்ளார். குழந்தை மைக்கேல் சற்று தூரத்தில் தனியாக விளையாடி கொண்டிருந்தான். அப்போது குழந்தையின் அருகே நடந்து வந்த மர்ம நபர் திடீர் என குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த 1.5 சவரன் தங்க செயினை பறித்துகொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் குறித்து முதியவர் பிரான்சிஸ் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.