சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை விடுதலை செய்து போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 2022-ம் ஆண்டு முனிவேல், அவரது அண்ணன் மகன் விமல் ஆகியோரை போலீஸார் கைது செய்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி போலீஸார் நிரூபிக்க தவறியதால் சந்தேகத்தின் பலன்களை குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு சாதமாக்கி விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.