துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டீ சர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து புதிதாக தாக்கல் செய்த 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது. உதயசூரியன் சின்னம் பொறித்த டீ ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், புதிதாக 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. மேலும், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு ஆடை விதிகளை வகுக்கவும் வலியுறுத்தப்பட்டு இருந்த நிலையில், வழக்குகள் தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஒரே விஷயத்திற்காக எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதிய வழக்குகளை திரும்பப் பெற உத்தரவிட்டனர்.