மதுரை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வி இயக்ககம் அரசாணை வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த கார்த்திகா கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட, முதன்மை கல்வி அலுவலராக இருந்த முருகன் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.