தமிழக வெற்றிக் கழக மாநாட்டை முன்னிட்டு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி, கும்பகோணம், சேலம், பண்ருட்டி செல்லும் இலகு ரக வாகனங்கள் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி செண்டூர் ஜங்சன் வழியாக செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டு, பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது.