இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் இதுவரை இரு சக்கர வாகன விற்பனை 18.4 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை கண்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 12.58 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு அது 15.44 லட்சமாக அதிகரித்துள்ளது. இதேபோல 150 முதல் 250 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.