மெக்சிகோவின் குரேரோ கடற்கரை பகுதியில் 1 புள்ளி 8 டன் கொக்கைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் போதைப்பொருள் கடத்திய ஐந்து பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து சுமார் ஆயிரம் லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.