பொதுவாக, அரசியல் பிரபலங்கள், நடிகர்கள் போன்றவர்களுக்கு தான், VVIP பாதுகாப்பு வழங்கி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், மீன்களுக்கு, VVIP பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏன் தெரியுமா?ஒரு நாட்டின் ராணுவம், இந்த மீன்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. 17 போர்க்கப்பல்கள், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் என்று பெரிய அளவில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. வங்கதேசத்தின் தேசிய சின்னமான மீன் Hilsa. இது பார்க்க வெள்ளி நிறத்தில் பளபளப்பாகவும், சுவையாகவும் இருக்கும், அப்பகுதி மக்கள் இதனை கடல் ராணி என்று அழைக்கின்றனர். இந்த வகையான மீன்கள், வங்காள விரிகுடாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் முட்டையிட வருகிறது. இந்த மீன்கள் தான் பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறது. 2025 அக்டோபரில் தொடங்கிய Mother ilish conservation operation நடவடிக்கையின் கீழ் 17 போர்க்கப்பல்கள், ரோந்து படகுகள், நவீன கடற்படை விமானங்கள் இந்த மீனுக்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. கடற்படையும் ஹெலிகாப்டர்களும் இப்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறது. Chandpur, Barishal, Khulna உள்ளிட்ட 9 கடலோர பகுதிகளில் அக்டோபர் 4 முதல் 25 ஆம் தேதி வரை மீன்பிடிக்க கடுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீன்களுக்கு எதனால் இவ்வளவு பாதுகாப்பு?கால நிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, அதிகப்படியான மீன் பிடிப்பு போன்ற காரணங்களால், இந்த மீன்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. சமீபத்திய புள்ளி விவரப்படி, உலகில் ஹில்சா உற்பத்தியில 70%க்கும் அதிகமானவை வங்காளதேசத்தில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால், இந்த வகையான மீன்கள் வேட்டையாடப்படுவதால் அதன் இருப்பு 30%க்கு குறைந்து விட்டதாம். குறிப்பாக, இந்த வகை மீன்கள், அக்டோபர் மாதத்தில அதிகமாக பாதிக்கப்படுகிறதாம். தற்போது, சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த மீன்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விடும் என்று, சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் தான் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மீனவர்கள் கடலுக்குள் நுழைவதைத் தடுக்க, போர்க்கப்பல்கள் மற்றும் அதிநவீன கடல்சார் ரோந்து விமானங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. இதனை, வங்கதேச ராணுவத்தின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் தரப்பு கண்காணிக்கிறது. அழிந்து வரும் அரிய உயிரினங்களை காப்போம்...