இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கி 8 பேர் காணமல் போன நிலையில், மீட்புப்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.