ஓணம் பண்டிகையையொட்டி இடைலக்காடு கிராமத்தில் குரங்குகளுக்கு விருந்தளிக்கும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது. சாலையோரத்தில், குரங்குகளுக்கு சாதத்துடன் 15 வகையான பழம் மற்றும் காய்கறிகள் என மேசையில் இலை போட்டு ஓணம் விருந்து அளிக்கப்பட்டது. குரங்கு கூட்டமும் சந்தோஷமாக உணவு உட்கொண்டதை பார்த்த மக்கள் அதனை வீடியோவும், புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.