11ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்கால் அணி ஒரு கோல் அடித்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் பெங்களூரு அணி பதில் கோல் அடித்தது