11வது இந்தியன் சூப்பர் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் கோவா அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதியில் ஒரு கோல் அடித்து கோவா அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஜாம்ஷெட்பூர் எப்.சி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.