ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய மாணவர்கள் 110 பேர் டெல்லி வந்தடைந்தனர். ஈரான் - இஸ்ரேல் இடையே நிலவி வரும் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி உர்மியா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர் 90 பேர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். ஈரானில் 13 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மருத்துவம் படித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையும் படியுங்கள் : இந்தியா- பாகிஸ் போரை தான் நிறுத்தியதாக கூறும் டிரம்ப்..