பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தில், 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு சிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், ஆர்சிபி மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் நிகில், நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்த டிஎன்ஏ நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.