குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் பழகிய 10 வயது சிறுமியை கடத்தி, வீட்டுக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, 16 வயது சிறுவன் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அச்சிறுவனை கைது செய்த போலீசார், மெஹ்சானா பகுதியில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.