தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.சென்னை கோட்டூர்புரத்தில் இன்று 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். அப்போது, 11ம் வகுப்பு அரியர் தேர்வுகளுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்11.03.2026 - தமிழ், இதர மொழிப்பாடங்கள்16.03.2026 - ஆங்கிலம்25.03.2026 - கணிதம்30.03.2026 - அறிவியல்02.04.2026 - சமூக அறிவியல்06.04.2026 - விருப்ப மொழிப்பாடங்கள்இதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதையும் பாருங்கள் - 10th public exam schedule 2025 | 10th, +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு | TN school exam news