10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. 12 ஆயிரத்து 487 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 86 ஆயிரத்து 970 மாணவர்கள் உள்ளிட்ட 9 லட்சத்து 13 ஆயிரத்து 84 பேர் தேர்வு எழுத உள்ளனர். 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்களில் நடைபெறும் தேர்வை கண்காணிக்க 48 ஆயிரத்து 500 ஆசிரியர்களும், தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க 4 ஆயிரத்து 800 பறக்கும் படையினரும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.