10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.இந்நிலையில் மாணவர்கள் உற்சாகத்துடனும், துணிவுடனும், தன்னம்பிக்கையுடனும் பொதுத் தேர்வினை எழுதி வெற்றி பெற வேண்டும் என விஜய் வாழ்த்தியுள்ளார்.