100 டிரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில், பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். நிபந்தனையின்றி 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா சம்மதிக்க வேண்டும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்தின. ஆனால் போர் நிறுத்த யோசனையை நிராகரித்த ரஷ்யா, ஷாகித், டிகாய் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.