தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தி, சேலம், திருப்பத்தூர், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், அதிகப்பட்சமாக ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் சுட்டெரித்தது.