தமிழகத்தில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு விரைவில் அரசுப் பணி வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சேலத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அவர், இந்த திட்டத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் எனவும், அதனடிப்படையில் நகரங்களுக்கும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், சேலத்தில் விளையாட்டு வீரர்கள் 60 பேர் தங்கி பயிற்சி மேற்கொள்ளும் வகையில், 7 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விளையாட்டு விடுதி உருவாக்கப்படும் என்றார்.