நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் பரிசுப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் முண்டியடித்ததில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மைதமா நகரிலுள்ள புனித டிரினிட்டி கிறிஸ்தவ ஆலயத்தில் உணவு மற்றும் உடைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், அவற்றை வாங்குவதற்காக மக்கள் முண்டியடித்துச் சென்றனர்.