வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் நடவடிக்கைகள் நேர்மையான முறையில் இருக்க வேண்டும் என, குழுவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள், ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். ஜனநாயக முறைப்படி குரலை எழுப்பியதாகவும், ஆனால், குழுவின் தலைவர் மொபைல் போனில் யாருடனோ பேசிய பிறகு திடிரென எழுந்து தங்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாகவும் சாடியுள்ளனர்.