மது ஒழிப்பு மாநாடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஒரு வாரமாக சுற்றியடித்த சூறாவளிக்கு மத்தியில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.மதுக் கடைகளை முழுமையாக மூட வேண்டும் என திட்டவட்டமாக கூறி வந்த திருமா, திடீரென விற்பனை குறைக்க வேண்டும் என தனது நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்கியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.