வரும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் திரையரங்குகளில் 10 படங்கள் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும். இதற்கு முக்கிய காரணம் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் வருகிற 21-ந் தேதி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், டிராகன், ராமம் ராகவம் , படவா, கெட் செட் பேபி , பிறந்த நாள் வாழ்த்து, ஈடாட்டம், ஆபீஸர் ஆன் டூ , விஷ்ணு பிரியா, பல்லாவரம் மனை எண் 666 உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.