திருப்பூர்: தாராபுரம் சத்யா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. இது தொடர்பான விசாரணையில் தொடர்ந்து திருப்பூர் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். கொடிமுடியை சேர்ந்த 30 வயது சத்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. எனினும், திருமணமாகாத இளைஞர்களை குறிப்பாக, வசதி படைத்த இளைஞர்களை குறிவைத்து, அவர்களை திருமணம் செய்து மோசடி செய்து வந்திருக்கிறார். படுவேகமாக நிரம்பும் உடுமலை அமராவதி அணை.. உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை திருமணம்: அந்தவகையில், தாராபுரத்தை சேர்ந்த 30 வயது பேக்கரி ஓனர் சத்யாவின் வலையில் விழுந்து, சத்யாவை 10 நாளைக்கு முன்பு திருமணமும் செய்துள்ளார். சத்யா பெயரை ரேஷன் கார்டில் பதிவதற்காக முனைந்தபோதுதான், கணவர் என்று வேறொருவரின் பெயர் பதிவாகியிருந்ததை கண்டு பேக்கரி ஓனர் அதிர்ச்சி அடைந்தார்.. இதனால் கொடிமுடிக்கே நேரடியாக சென்று சத்யாவை பற்றி விசாரித்தபோதுதான், அவர் ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்தது தெரியவந்தது.. பின்னர், தாராபுரம் மகளிர் போலீசில் புகார் தரப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த சத்யாவை போலீசார் தேடி வந்தனர். மோசடிகள்: திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், சர்வேயர், டிஎஸ்.பி, சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், தொழிலதிபர்கள் , அரசியல்வாதிகள், ஆடு மேய்ப்பவர்கள், மாடு மேய்ப்பவரைகள் என 53 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும், லட்சக்கணக்கில் இவர்களிடம் நகை, பணத்தை சத்யா பறித்ததாகவும் கூறப்படுகிறது. View this post on Instagram A post shared by @btech_fx