கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் 3 நாட்களாக மௌனமாக இருந்த நடிகர் விஜய், “நானும் மனுஷன் தானே, மனசு முழுக்க வலி” என உருக்கமாக பேசி விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். ”என் லைஃப்ல இந்த மாதிரி வலி நிறைந்த நிலைமையை நான் பார்த்ததில்லை. மனசு முழுக்க வலி, வலி மட்டும் தான். இந்த சுற்றுப்பயணத்தில் என்ன மக்கள் பார்க்க வருகிறார்கள். அதுக்கு ஒரே ஒரு காரணம் அவர்கள் என்மேல் வைத்துள்ள அன்பும், பாசமும் தான். அதனால் தான் இந்த சுற்றுப்பயணத்தில் மற்ற எல்லாத்தையும் தாண்டி மக்களின் பாதுகாப்பு ரொம்ப கவனமாக இருந்தோம். இந்த அரசியல் காரணத்தை எல்லாத்தையும் ஒதுக்கி வைத்து மக்களோட பாதுகாப்பை கருதி அதுக்கான இடங்களை தேர்வு செய்து அனுமதி கேட்டோம். ஆனால், நடக்க கூடாது நடந்துவிட்டது. நானும் மனுஷன் தானே. அத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கும்போது நான் எப்படி அங்கிருந்து வர முடியும்.நான் திரும்ப அங்க போகனும்னு இருந்தா அத ஒரு காரணம் காட்டி பதற்றமான சூழலும், மேலும் சில சம்பவங்கள் நடக்க கூடாதுன்னு தான் நான் அங்க போகாம, இருக்கேன். இந்த நேரத்தில் சொந்தங்களை இழந்து இருப்பவர்களுக்கு என்னோட ஆதரவு இருக்கும். இது ஈடு செய்ய முடியாத இழப்பு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும். இந்த நேரத்தில் எங்களோட நிலைமையை புரிஞ்சிக் கொண்டு எங்களுக்காக பேசிய அனைத்து கட்சி தலைவர்களுக்கு எங்களின் நன்றி. மற்ற இடத்தில் சுற்றுப்பயணம் செய்தோம். அங்க நடக்காதது கரூரில் மட்டும் ஏன் நடக்குது. மக்களுக்கு எல்லாமே தெரியும். கரூரில் நடந்ததை மக்கள் சொல்லும் போது கடவுளேஎ எனக்கு எல்லாம் சொல்வது போல் இருந்தது. எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் தான் பேசினோம். அதை தாண்டி நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எங்கள் கட்சி தோழர்கள் மீது வழக்குப்பதிவு. சோஷியல் மீடியாவில் கருத்து சொல்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு. சிஎம் சார் என் உங்களுக்கு எதாவது என்ன பழிவாங்கனும்னு நினைத்தால் என்ன பழிவாங்குங்க. அவங்க மேல கை வைக்காதீங்க. நான் வீட்ல இருப்பேன். இல்லனா ஆஃபிசில் இருப்பேன். என்ன என்ன வேணும்னாலும் செய்யுங்கள். நமது அரசியல் பயணம் இன்னும் ஆழமாக தொடரும்” என பேசியுள்ளார்.