ஒரு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும் தான் முதன்மையானது என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டம். மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. காலக்கெடு நிர்ணயித்து, 2 நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் நீதிபதிகள் தீர்ப்பு. ஒரு மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகாரங்கள் இருக்க முடியாது, அரசு தான் மாநிலத்தை முழுமையாக செலுத்தக் கூடிய அதிகார அமைப்பு எனவும் திட்டவட்டம். சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கான ஒப்புதலை, ஆளுநர் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது. மசோதாக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் தான் உள்ளது என தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம். ஒன்று மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்க வேண்டும், அல்லது திருப்பி அனுப்ப வேண்டும், இல்லை என்றால் நிராகரிக்க வேண்டும் என அறிவுறுத்தல்.