திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற டெமோ ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியது. முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என்ஜின்களுடன் சேர்த்து மொத்தம் 8 பெட்டிகளுடன் சென்ற ரயில், திருவெறும்பூர் ரயில் நிலையத்தின் 2-ம் நடைமேடையில் வந்த நின்றது. அப்போது ரயிலின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த எஞ்ஜின் பகுதியில் புகை வரவே பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு புகை உடனடியாக அணைக்கப்பட்டதால் பதற்றம் தணிந்தது.